குடியரசு தினவிழாவில் பங்கேற்க ஏற்பாடு.. இந்தியா வந்தடைந்தார் இந்தோனேசிய அதிபர்!
Participation in Republic Day celebrations Indonesian President arrives in India
குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ நேற்று இரவு டெல்லி வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை இணை மந்திரி பபித்ரா மார்கிரெட்டா உற்சாகமாக வரவேற்றார்.
இந்திய நாட்டின் 76-வது குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி இந்திய நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் மத்திய அரசு சார்பில் வெகுவிமரிசியாக அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
அதேபோல ஒவ்வொரு குடியரசு தின அணிவகுப்பிலும் வெளிநாட்டைச் சேர்ந்த அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்வார்.அந்தவகையில் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
73 வயதான இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ முன்னாள் ராணுவ தளபதி ஆவார். இவர் கடந்த அக்டோபர் மாதம் அவர் அதிபராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ நேற்று இரவு டெல்லி வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை இணை மந்திரி பபித்ரா மார்கிரெட்டா உற்சாகமாக வரவேற்றார்.
டெல்லி வந்துள்ள இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோ ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
English Summary
Participation in Republic Day celebrations Indonesian President arrives in India