இன்று திருவாபரண ஊர்வலம்..நாளை மறுநாள் மகரஜோதி தரிசனம்..சபரிமலையில் குவியும் பக்தர்கள்!
Today is the Thiruvabharana procession Makarajothi darshan the day after tomorrow Devotees throng Sabarimala
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளம் அரண்மனையில் இருந்து இன்று மதியம் புறப்படுகிறது.வரும் இடங்களில் எல்லாம் திருவாபரணத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்பதால் திருவாபரண ஊர்வலம் நாளை மறுநாள் (14-ந்தேதி) பம்பைக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்கின்றனர்.
மகரவிளக்கு பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்களின் வருகை அதிக மாக காணப்பட்டதுடன் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாளை மறுநாள் (14-ந்தேதி) மகரவிளக்கு பூஜை நடைபெறுவதையொட்டி அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் தேவசம்போர்டு செய்து வருகிறது.
மகரவிளக்கு பூஜையன்று பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் பம்பை, சபரிமலையில் கூடுதல் போலீசார் பணி யமர்த்தப்பட்டு உள்ளனர் என்றும் அவர்கள் இன்று முதல் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் மகரவிளக்கு பூஜை தினத்தில் மாலையில் ஜோதி தரிசனம் நடைபெறும்போது முன்னதாக ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளம் அரண்மனையில் இருந்து இன்று மதியம் புறப்படுகிறது.
வரும் இடங்களில் எல்லாம் திருவாபரணத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்பதால் திருவாபரண ஊர்வலம் நாளை மறுநாள் (14-ந்தேதி) பம்பைக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் அன்று மாலையில் பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு கொண்டு வரப்பட்டு அதன்பிறகு திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரஜோதி தரிசனம் முடிந்ததும் மகரவிளக்கு பூஜை முடிந்து பந்தள அரண்மனை பிரதிநிதி தரிசனம் செய்ததும் வருகிற 20-ந்தேதி காலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.
English Summary
Today is the Thiruvabharana procession Makarajothi darshan the day after tomorrow Devotees throng Sabarimala