#BREAKING:: பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாட்னா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை..!! - Seithipunal
Seithipunal


தேசிய மற்றும் மாநில அளவில் மக்களின் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளி விவரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பை கூட நடத்ததாத மத்திய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதாக தெரியவில்லை. மாநில அரசுகள் விரும்பினால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது.

இந்த நிலையில் பீகாரில் மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பு, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு அதில் அனைத்து சாதி, அதன் உபசாதிகள், மதம் போன்ற எல்லா விவரங்களும் இடம்பெற்றிருக்கும் வகையில் சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார்.

அதன்படி பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு இரு கட்டங்களாக 45 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு முதல் கட்ட கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த முதல் கட்ட கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் உள்ள வீடுகளின் எண்ணிக்கை குறித்த விவரம் சேகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பில் மக்களின் சாதி, துணை சாதி, மதம், பொருளாதார நிலை ஆகியவை குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் மூலம் மொத்தம் 12.7 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திருட்டுப்பட உள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  ஜூலை 3ம் தேதி வரை சாதி வாரிய கணக்கெடுப்பை நடத்த கூடாது என பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக முழுமையான சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தும் முதல் மாநிலம் என்ற பெருமை பீகார் பெற்ற நிலையில் தற்போது பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PatnaHC interim stay on conduct of caste wise census in Bihar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->