சுதந்திர தின கொண்டாட்டம் குறித்து.. சர்ச்சை ட்வீட் போட்ட பிரபல ஒளிப்பதிவாளர்.! - Seithipunal
Seithipunal


பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுதந்திர தின வாழ்த்து சர்ச்சையாகியுள்ளது.

நமது நாட்டின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டில் தேசிய கொடியை வீடுகளில் பறக்கவிடவும், அனைவரும் தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு புகைப்படமாக வைக்கவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என்று பிரபலங்கள் அனைவரும் அதை செய்துள்ளனர். இந்நிலையில் ஆளும் பாஜக அரசு நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க சுதந்திர தினம், தேசிய கொடி ஆகியவற்றின் மூலம் திசை திருப்புகிறது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த நிலையில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பி.சி.ஸ்ரீராம் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் "நான் எனது நாட்டை நேசிக்கிறேன். ஆனால் அரசாங்கத்தை அல்ல. ஜெய்ஹிந்த்" என்று கூறி சுதந்திர தின வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PC Sriram about independent day Celebration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->