தாம்பூலத்தில் குவாட்டர் பாட்டில்.. தாய்மாமன் செய்த அட்ராசிட்டி.. ₹50 ஆயிரம் பைன் போட்ட கலால் துறை..!!
Penalty for serving liquor at a wedding reception
சென்னையைச் சேர்ந்த நிர்மல் என்பவர் மற்றும் புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சேர்ந்த ஆர்த்தி என்பவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக மணமகளின் தாய்மாமன் சார்பில் வழங்கிய தாம்பூல பையில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு ஆகியவற்றுடன் குவாட்டர் சரக்கு பாட்டில் வழங்கியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மணப்பெண்ணின் தாய் மாமனின் அட்ராசிட்டிக்கு பல்வேறு தரப்பட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.
திருமண தாம்பூலம் பையில் மதுபானம் கொடுத்த விவகாரத்தில் மதுபானம் விற்பனை செய்த கடை உரிமையாளர், திருமணம் நடைபெற்ற மண்டபத்தின் உரிமையாளர், மணமகளின் தாய்மாமன் ராஜ்குமார் ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் குமரன் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Penalty for serving liquor at a wedding reception