குழம்புல கறி எங்கடா... பாஜக எம்.பியின் அசைவ விருந்தில் கைகலப்பு..!
peoples clash bjp mp vinoth bindh non veg feast
எம்.பி அலுவலகத்தில் நடந்த அசைவ விருந்தில் கறி இல்லாததால் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் மாவட்டத்தில் பாஜகவின் பதோஹி தொகுதி எம்.பி. வினோத் பிந்த் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.
இந்த விருந்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உணவருந்தினர். அப்போது மட்டன் குழம்பில் ஆட்டுக்கறி இல்லாததால் கோவமான இளைஞர் ஒருவர் உணவு பரிமாறிய நபரிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார்.
சிறிது நேரத்திலேயே வாக்குவாதம் கைகலப்பாகி இரண்டு தரப்பினர் சண்டையிட்டு கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
peoples clash bjp mp vinoth bindh non veg feast