ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு பயன்படுத்த அனுமதி.! - Seithipunal
Seithipunal


"ஸ்புட்னிக் லைட்" கொரோனா தடுப்பூசியை பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "ஒரே தவனையாக செலுக்திக் கொள்ளக்கூடிய ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது என்றும், நமது நாட்டில் கொரோனா தொற்றை தடுக்க, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 9-வது தடுப்பூசி இது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கூடுதலாக தட்டுப்பூசிக்கு அனுமதி கிடைத்திருப்பது, கொரோனா தொற்றை ஒழிக்கும் நம் நாட்டின் ஒருங்கிணைந்த முயற்சிக்கு இது வலு சேர்க்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசியை பல்வேறு கட்டுப்பாட்டு நடைமுறைகளுடன் அவசர கால பயன்பாட்டிற்கு மட்டும் அனுமதிக்கலாம் என இந்திய மருந்துகள் ஆணைய நிபுனர் குழு அண்மையில் பரிந்துரைத்திருந்த நிலையில், தற்போது அதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

கோவிஷீல்டு, கொவேக்சின், ஸ்புட்னிக் வி உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகள் அவசர கால பயன்பாட்டிற்கு பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Permission granted for Sputnik lite vaccine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->