மீண்டும் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!
Petrol and diesel price possible to increase in few days
உலகளவில் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலை உச்சத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரானா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 7ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6700 வரை விற்பனையாகி வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் 5 மாநில தேர்தல் காரணமாக கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், 5 மாநில தேர்தல் முடிவடைந்தவுடன் குறைந்தபட்சம் ரூபாய் 10 வரை பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Petrol and diesel price possible to increase in few days