பள்ளி மாணவர்களிடையே மோதல் - பிளஸ் 2 மாணவரின் காது துண்டிப்பு.!
plus 2 student ear amputated in kerala kottayam
கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயத்தில் மாடல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான விடுதியுள்ளது. இந்த விடுதியில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விடுதியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரின் காது துண்டிக்கப்பட்டது.
உடனே அந்த மாணவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர்
போலீசில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரின் காது துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
plus 2 student ear amputated in kerala kottayam