என் நண்பர் மோடி சிறந்த தலைவர் - புகழ்ந்து தள்ளிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்!!
PM Modi Donald Trump White House INDIA USA
அமெரிக்கா சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் இன்று முக்கிய சந்திப்பை மேற்கொண்டார்.
இந்திய நேரப்படி அதிகாலை நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துப் பேசப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, அதிபர் டிரம்ப் இந்தியாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவோம் என உறுதியளித்தார். "இந்தியாவுக்காக மிகச் சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க உள்ளோம். அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா வாங்க உள்ளது. இது இரு நாடுகளுக்கும் பெரும் ஆதாயம் ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடியை சிறந்த தலைவர் என புகழ்ந்த டிரம்ப், "மோடி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்தியாவுடனான நட்பு, எதிர்காலத்தில் இன்னும் அதிகம் வளர்ச்சியடையும்" என்றார்.
மோடியுடன் நட்பு மிக நெருக்கமானது எனத் தெரிவித்த அவர், அவரை வெள்ளை மாளிகையில் வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், இருநாட்டுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள், முதலீடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
English Summary
PM Modi Donald Trump White House INDIA USA