ஊழலானது  நாட்டை கரையான் போன்று அரித்து கொண்டிருக்கிறது.- செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரை.! - Seithipunal
Seithipunal


இந்தியா விடுதலைபெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 76- வது  சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது .

 இவ்விழாவை முன்னிட்டு , மூவண்ணத்திலான தலைப்பாகை அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். 

அதன்பின்னர் , டெல்லியில் உள்ள  செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, வணக்கம் செலுத்தி மக்களிடையே உரையாற்றினார். அவர் பேசும்போது, நாட்டில் ஊழலுக்கு எதிராக நம்முடைய முழு பலத்துடன் நாம் போராட வேண்டும் என்றார் .

இன்றைய தினம் நாம் 2 பெரிய சவால்களை சந்தித்து வருகிறோம். ஒன்று , ஊழல் , மற்றொன்று  பரிவார்வாத் அதாவது ,சொந்த குடும்பத்தினருக்கு நேர்மையற்ற முறையில் சலுகை வழங்குவது என குறிப்பிட்டு உள்ளார். ஊழலானது, நாட்டை கரையான் போன்று அரித்து கொண்டிருக்கிறது. 

அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும். தகுதியின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நமது அமைப்புகளின் வலிமையை உணர்வதற்காக, சொந்த குடும்பத்தினருக்கு நேர்மையற்ற முறையில் சலுகை அளிப்பதற்கு எதிராக விழிப்புணர்வை நாம் அதிகரிக்க வேண்டும் என்று  அவர் பேசியுள்ளார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi independents day speech 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->