இன்று முதல்.. இமாச்சலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை : பிரதமர் மோடி திறப்பு..! - Seithipunal
Seithipunal


இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர், ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 

இதையடுத்து, பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைத்து, எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டு வருகிறார். 

அதன் பின்னர் லுஹ்னு மைதானத்துக்கு செல்ல இருக்கும் அவர், அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்தில் நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi open aims hospital in himachal pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->