தொழில்நுட்பமும், திறமையும் இந்திய வளர்ச்சி பயணத்திற்கான 2 தூண்கள் - பிரதமர் மோடி
PM Modi said that technology and skills are the 2 pillars of Indias growth
ஐக்கிய நாடுகளின் இரண்டாவது உலக புவிசார் தகவல் கூட்டம் ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது, தொழில்நுட்பமும், திறமையும் இந்திய வளர்ச்சி பயணத்திற்கான 2 தூண்களாகும். வங்கி சேவை இல்லாத 450 மில்லியன் மக்களுக்கு வங்கி சேவை வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம். காப்பீடு இல்லாத 135 மில்லியன் மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த பிரான்ஸ் மக்கள் தொகை அளவாகும். 110 மில்லியன் குடும்பங்களுக்கு சுகாதார வசதி செய்து தரப்பட்டுள்ளது. 60 மில்லியன் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. யாரும் பின் தங்கி விடக்கூடாது என்பதை இந்தியா உறுதி செய்கிறது. சிறந்த கண்டுபிடிப்பு திறனுடன் இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா. தொழில் தொடங்குவதில் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது.
2021-ம் ஆண்டு முதல் தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது திறமையான இந்திய இளைஞர்களால் சத்தியமானது என்று தெரிவித்தார்.
English Summary
PM Modi said that technology and skills are the 2 pillars of Indias growth