2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கியை செலுத்திவிடுங்கள்.! மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை.! - Seithipunal
Seithipunal


நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் எரிசக்தி துறையை வலுப்படுத்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

மேலும், மின்துறைக்கு மாநில அரசுகள் வைத்துள்ள பாக்கி தொகையான இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மின்கழக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

அப்போது, தெலுங்கானா மாநிலம் மற்றும் கேரளாவில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையங்களை தொடங்கிவைத்தார்.

மேலும், குஜராத் மாநிலத்தில் இயற்கை எரிவாயுடன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர். 

பின்னர் இந்த நிகழ்ச்சிகள் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளில் முன்னேற்றத்தை விரைவுப்படுத்துவதில் எரிசக்தி மற்றும் மின்துறை பெரும் பங்கும் வகிக்கும், அதற்கு, மின்துறைக்கு மாநில அரசுகள் வைத்துள்ள பாக்கி தொகையான இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாயை செலுத்த வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

மேலும், முழு நாட்டையும் இணைக்கும் வகையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கிலோ மீட்டர் தூர மின் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் பெருமிதம் கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi say about electricity and india economy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->