5 புதிய வந்தே பாரத் ரயில் சேவை..! இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி...! - Seithipunal
Seithipunal


இன்று 5 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களை அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன. இதன் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் தொடங்கப்பட்ட நிலையில், இந்தியா முழுவதும் தற்பொழுது 18 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். இதில் முதலாவதாக கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு மற்றும் தார்வாட் நகரத்திற்கு இடையே இயக்கப்பட உள்ளது. இது கர்நாடகாவின் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும்.

இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் போபால்-ஜபல்பூர் மற்றும் போபால்-இந்தூர் என இரண்டு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதையடுத்து பீகார் மாநிலத்தில் பாட்னாவிலிருந்து ஜார்க்கண்ட மாநிலம் ராஞ்சி இடையே இயக்கப்பட உள்ளது.

மேலும் ஐந்தாவதாக மும்பை மற்றும் கோவா இடையேயான வழித்தடத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த ரயில்களின் மூலம் நாட்டில் உள்ள வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயரும். மேலும் இந்த புதிய ரயில்களின் துவக்கமானது, ரயில் இணைப்பை மேம்படுத்தவும், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தவும் அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM modi to inaugurate 5 new vande bharat train service today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->