வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி.!
pm modi tweet about jarkhant and maharastra election
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்துக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதேபோல் 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டமாக சட்டசபைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன் படி முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கானதேர்தல் கடந்த 13-ந் தேதி நடந்தது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இன்று 2-வது கட்ட தேர்தல் தொடங்கியது.
இரண்டு மாநிலங்களிலும் காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு தொடங்கியதையடுத்து அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் என்று பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்குப்பதிவில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- "மகாராஷ்டிரா மாநில வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகப் பண்டிகையின் சிறப்பை அதிகரிக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். ஜார்க்கண்ட் வாக்காளர்களும் அதிக பங்கேற்புடன் வாக்குப்பதிவு சாதனை படைக்க வேண்டும். முதல்முறையாக வாக்களிப்பவர்களின் ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் பலம்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
pm modi tweet about jarkhant and maharastra election