மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அவரது எண்ணங்களை நினைவு கூறுகிறேன்- பிரதமர் மோடி ட்வீட்.! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தியாகிகள் தினம் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30ஆம் தேதி இந்தியாவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 

தியாகிகளின் வீரச் செயல்களை நினைவுப்படுத்தி இளம் தலைமுறையினரிடம் நாட்டுப்பற்றை ஏற்படுத்தவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தியாகிகளின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் 'மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அவரது ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூறுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமது தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். வீரர்களின் தியாகங்கள் ஒருபோது மறக்கப்படாது. மேலும் உழைக்க வேண்டும் என்ற உறுதியை வலுப்படுத்தும்' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi tweet about Mahatma Gandhi memorial day


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->