இதுதான் மக்களின் சமூக, ஆன்மிகக் கடமை - பிரதமர் நரேந்திர மோடி.!
PMModi MannKiBaat summer water
நீர் பராமரிப்பும், நீர் நிலைகளின் பாதுகாப்பதுதான் மக்களின் சமூக, ஆன்மிகக் கடமை என்று, பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய வானொலியில் 88வது முறையாக ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார், அதன் விவரம் பின்வருமாறு :
"நம் வேதங்கள் தொடங்கி, புராணங்கள் வரை, நீரை சேமிக்க குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்றும், மனிதர்களின் சமூக, ஆன்மிகக் கடமை இதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பகுதியில் உங்களுக்கு நீர் கிடைக்கலாம். ஆனால், நீர்த்தட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். தற்போது கோடை காலம். தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவோர் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். நாம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.
மார்ச் மாதத்தில் 10 லட்சம் கோடி ருபாய் வரை யூபிஐ டிஜிட்டல் (Google pay, PayTM....,) பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடந்துவருகிறது.
நாட்டில் உள்ள சிறிய உணவகங்கள், பூக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், பழக்கடைகளில் கூட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் பணத்தை எடுக்க ஏடிஎம்மை தேடி மக்கள் அலைய இனி தேவையில்லை. கையில் பணத்தை எடுத்துச் செல்லவும் தேவையில்லை.
நாள் முழுக்க கையில் காசு இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் நம் தேவைகளை பூர்த்திசெய்ய பணம் செலுத்த முடியும். ஒரு நாள் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை உணர வேண்டும். தொழில்நுட்பத்தின் சக்கி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
தற்போது கோடை காலம். தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவோர் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். நாம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.
English Summary
PMModi MannKiBaat summer water