போலீசையே அலைய வைக்கும் 'யூ டியூபர்'.. கண்டுபிடிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கும் போலீஸ்..!
Police raided Bobby Kataria drinking alcohol in the road
உத்தர்கண்டில் நடுரோட்டில் மது அருந்தியதாக யூடியுப்பர் மீது தொடரப்பட்ட வழக்கில் பாபி கட்டாரியாவின் இருப்பிடத்தை தெரிவிப்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது உத்தரகாண்ட் போலீஸ்.
'யூ டியூப்' , 'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமான பாபி கட்டாரியாவை, 6.30 லட்சம் பேர் பின் தொடர்கின்ற நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் டேராடூன்- முசூரி சாலையின் நடுவில், கட்டாரியா நாற்காலியில் அமர்ந்த படி மது அருந்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதையடுத்து உத்தர்கண்ட் போலீசார் ''கட்டாரியா மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இது சம்பவம் குறித்து நேற்று டேராடூன் மாவட்ட எஸ்.பி. அளித்து பேட்டியில்,
பாபி கட்டாரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜாமினில் வெளிவரமுடியாத நிலையில் பிடிரவாண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில். அவரை தேடி வருகிறோம். அவர் இருக்குமிடம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
English Summary
Police raided Bobby Kataria drinking alcohol in the road