பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினர், கோவையில் பிரதமரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பு..! - Seithipunal
Seithipunal


பாண்டிச்சேரியை சார்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர், கோவை சூலூரில் நடைபெற்ற பிரதமரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்திலுள்ள வட்நகர் என்ற இடத்தில் பிறந்தார். ஆர்.எஸ்.எஸ்-இன் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார்.

பிறகு 1998 ஆம் ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி, இதையடுத்து இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு, பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்ற போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 

2001 ஆம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். பிறகு 2014 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பதவியேற்றார். மீண்டும் 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றுள்ளார். செப்டம்பர் 17 ஆம் தேதியான இன்று அவரது பிறந்தநாள் கட்சியினரால் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், உலகளவில் இருந்து வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணித்தலைவர் ஜி.கே நாகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு.விவிலியன் ரிச்சர்ட்ஸ் இன்று (17.09.2021) பாஜக விவசாய அணி சார்பாக கோவை சூலூர் அத்தப்பகவுண்டன்புதூரில் நடைபெற்ற பாரதப்பிரதமர் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்டு இனிப்புகளை வழங்கினார்.

அதன்பின்னர் அவருக்கு பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். இந்தியாவிலயே மிகவும் இளவயதான இவர் தந்தையாரும் பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். தமிழக பாஜக விவசாய அணியின் பணிகளை பாராட்டியவர் தமிழ்மண் பாண்டிச்சேரியை போல தமிழகத்திலும் தாமரை மலரும் என்ற நம்பிக்கையை விதைத்தார் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry BJP MLA Arrived Coimbatore Sulur to Celebrate PM Narendra Modi Birthday GK Nagaraj Statement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->