தமிழ் புத்தாண்டு: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். இதேபோல், வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நபா பர்ஷா, வைசாகடி பண்டிகை என பல மாநிலங்களில் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நபா பர்ஷா, வைஷாகாதி மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளின் புனிதமான நேரத்தில், நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த விழாக்கள் நமது "அன்னதாதா" விவசாயிகளின் கடின உழைப்பால் ஏற்படும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தின் கொண்டாட்டமாகும். இந்த மகிழ்ச்சியான பண்டிகைகள் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கும், சக குடிமக்களிடையே நல்லிணக்க உணர்வைப் பரப்புவதற்கும் ஊக்கமளிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Draupadi Murmu wishes Tamil NewYear


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->