பார்வை மாற்றுத்திறனாளிகள் எளிதில் கண்டறியும் வகையில் புதிய நாணயங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


பார்வை மாற்றுத்திறனாளிகள் எளிதில் கண்டறியும் வகையில் புதிய நாணயங்களை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவரங்கள் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டார்.

அப்பொழுது அவர் விடுதலையின் 75ஆம் ஆண்டு முத்திரையுடன் கூடிய புதிய நாணயங்களை மக்களின் பயன்பாட்டிற்காக வெளியிட்டார்.

இதில் 1, 2, 5, 10 மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான இந்த நாணயங்கள் பார்வை குறைபாடு உள்ளவர்கள் எளிதில் அடையாளம் கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. 

இதைத் தொடர்ந்து மத்திய அரசு செயல்படுத்தி வரும் கடன் உதவி திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஜன் சமர்த் வலைதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

மேலும் கடன் வழங்குவோரையும், பெருவோரையும் ஒரே தளத்தில் சந்திக்க வைத்து கடன் பெறும் நடவடிக்கையை எளிதாக்க இந்த வலைதளம் உதவும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi launches the new coins


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->