விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் முழு ஈடுபாடு கொண்டது எங்கள் அரசு - பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான முதலமைச்சரவைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டத்தை தொடரவும், மறு சிரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு திட்டத்தை தொடரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.69,515 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த முதல் அமைச்சரவை கூட்டம் விவசாயிகளுக்கானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "எங்களுடைய அரசு விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் முழு ஈடுபாடு கொண்ட அரசு. நமது தேசத்திற்கு உணவளிப்பதற்கு கடுமையாக உழைக்கும் அனைத்து விவசாய சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். 

2025ம் ஆண்டின் முதல் அமைச்சரவை நமது விவசாயிகளின் செழிப்பை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகளுக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi speech about first ministers meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->