வீரர்களின் தைரியம் வலுவான இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கிறது - பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தது. 

அப்போது, பயங்கரவாதிகள் தற்கொலைப்படை பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினர் நாற்பது பேர் உயிரிழந்தனர். 

இதனை பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்தியது அம்பலமானது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தான் நாட்டில் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. 

இதையடுத்து, மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அப்பகுதியை தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்களுக்கு நினைவுதினமாக அனுசரிக்கப்படுகிறது.

அதன் படி, இன்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், வீரமரணமடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "இந்த நாளில் புல்வாமா தாக்குதலில் நாம் இழந்த நமது வீரம் மிக்க வீரர்களை நினைவு கூர்வோம். வீரர்களின் உயிர் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். வீரர்களின் தைரியம் வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கிறது' என்றுத் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi tribute to pulwama attack day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->