புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை நாக்பூர் மற்றும் சத்தீஸ்கர் செல்லும் பிரதமர் மோடி..! - Seithipunal
Seithipunal


நாளை மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். அங்கு பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; மாதவ் நேத்ராலயா கண் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில், 250 படுக்கைகள், 14 வெளிநோயாளி பிரிவு மற்றும் 14 நவீன ஆபரேசன் தியேட்டர்களுடன் கூடிய மருத்துவமனை கட்டடம் அமைகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மோடி அவர்கள்,  சோலார் டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸில் 1,250 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலத்தில் வான்வழி வாகனங்களுக்காக புதிதாக கட்டப்பட்ட விமான ஓடுதளத்தையும் அவர் திறந்து வைக்கவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும்,  ஸ்மிருதி மந்தீரில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்றும்,  அங்கு, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் ஹெட்கேவார், கோல்வால்கர் ஆகியோரின் படங்களுக்கு மரியாதை செலுத்த உள்ளார் என்றும், அதனை தொடர்ந்து, தீக்ஷாபூமியில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த மஹாராஷ்டிரா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி சத்தீஸ்கர் சென்று அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi will visit Nagpur and Chhattisgarh tomorrow to inaugurate new projects


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->