பெண்குழந்தைகளின் சாதனை குறித்து இந்தியா பெருமை கொள்கிறது.
prime minister modi wish to national women childrens day
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் குழந்தைகளுக்கும் பாரத பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இன்று, தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், பெண் குழந்தைக்கு தொடர்ந்து அதிகாரம் அளிப்பதற்கும், அவளுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் எங்கள் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். அனைத்து துறைகளிலும் பெண் குழந்தையின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது.
பெண் குழந்தைகளை மேம்படுத்தும் கல்வி, தொழில்நுட்பம், திறன்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு போன்ற துறைகளில் தனது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
prime minister modi wish to national women childrens day