இன்று புருனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்! - Seithipunal
Seithipunal


கடந்த 21ம் தேதி 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்கு ஐரோப்பிய நாடான போலந்திற்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து 10 மணி நேரம் ரயிலில் பயணித்து 23ம் தேதி உக்ரைன் சென்றார். இத பின்னர் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை தலைநகர் கீவில் நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி  புருனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக பயணம் செய்கிறார். இது குறித்து நரேந்திர மோடி அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார், அதில் அவர் கூறியது, அடுத்த இரண்டு நாட்களுக்கு நான் புருனே மற்றும் சிங்கப்பூர் செல்கிறேன்.  இந்தியாவுடனான நட்புறவை புருனே, சிங்கப்பூர் நாடுகளுடன் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். இந்தியா – புருனே இடையே நட்புறவு ஏற்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்திக்க ஆவலுடன் காத்துகொண்டு உள்ளேன். சிங்கப்பூரில், அதிபர் தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியென் லூங், மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். முக்கிய துறைகளில் உறவுகளை மேலும் நன்றாக வலுப்படுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.”

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi's visit to Brunei and Singapore today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->