புதுச்சேரி கடற்கரை உலகளவில் சிறந்த சுற்றுலாத் தலமாக தேர்வு - லோன்லி பிளானட் 2025 பட்டியல்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி: சுற்றுலா துறையில் முன்னணியில் இருக்கும் புதுச்சேரி மாநிலத்திற்கு தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

புதுச்சேரியின் ராக் கடற்கரை, அதன் அழகு மற்றும் சுற்றுலா வசதிகளுக்காக முதன்மையான சுற்றுலா தளமாக விளங்குகிறது. இந்த நிலையில், புகழ்பெற்ற பயண வழிகாட்டி நிறுவனமான "லோன்லி பிளானட்" 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த பயண இடங்களை வெளியிட்டுள்ளது. 

இந்த பட்டியலில், உலகின் முக்கியமான 30 நகரங்கள், நாடுகள் மற்றும் பிராந்தியங்களை பரிந்துரை செய்து, சுற்றுலா பயணிகளுக்கு அவற்றை கண்டுகளிக்க வேண்டிய இடங்கள் என்ற உயரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது.

அதன் அடிப்படையில், சிறந்த நகரங்கள் பட்டியலில், பிரான்ஸ் நாட்டின் துலூசின் கால்வாய் கரைகள் முதலிடம் பெற்றுள்ளன. அதன்பிறகு, இந்தியாவில் புதுச்சேரியின் கடற்கரை 2வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. இது புதுச்சேரி கடற்கரைக்கு ஒரு பெரும் கௌரவமாகும். மேலும், பல்கேரியாவின் பான்ஸ்கோ நகரம் 3வது இடத்தில் உள்ளது.

சிறந்த நாடுகளின் பட்டியலில், கேமரூன் தனது கடற்கரைகள், இரவு வாழ்க்கை, மற்றும் அமைதியான பூங்காக்கள் என்பவைகளின் அடிப்படையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், லிதுவேனியா மற்றும் பிஜி முறையே 2வது மற்றும் 3வது இடங்களைப் பிடித்துள்ளன.

பிராந்தியங்களின் சிறந்த பட்டியலில், அமெரிக்காவின் தென் கரோலினாவின் லோகன்ட்ரி மற்றும் கடலோர ஜார்ஜியா முதல் இடத்தைப் பெற்றுள்ளன. நேபாளத்தின் தெராய் பகுதி 2வது இடத்தில் உள்ளது, மேலும் ஆஸ்திரேலியாவின் பிராந்தியமும் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வகையில் புதுச்சேரி, 2025 ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலா துறையில் மேலும் முக்கிய இடத்தை பெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Beach Named World Best Tourist Destination Lonely Planet 2025 List


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->