நீங்க சபரிமலைக்கு விமானத்தில் போறீங்களா?....இதோ மத்திய அரசு அறிவித்த சிறப்பு சலுகை! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.

குறிப்பாக மார்கழி மாதத்தில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை விழாவிற்காக, கோவில் நடை கார்த்திகை மாதம் முழுவதும் திறக்கப்பட்டிருக்கும். இந்த காலகட்டங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

பின்னர் மண்டல பூஜை முடிந்த உடன், கோவில் நடை அடைக்கப்பட்டு தை மாதமான மகரஜோதியின் போது கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். இந்த காலகட்டங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அதன்படி, நடப்பு ஆண்டில் வரும் டிசம்பர் மாதம் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெறும் நிலையில், அன்று இரவு நடை சாத்தப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் விமான பயணத்தின் போது இருமுடி கட்டுடன் நெய், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும், இவை தற்போது முதல் ஜனவரி மாதம் 20-ம் தேதி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Are you going to sabarimala by plane here is the special offer announced by the central government


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->