மேற்கு வங்காளத்தை துவம்சம் செய்த டானா புயல்!...2 பேர் பலி!... 2 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைப்பு! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து  23-ம் தேதி  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக உருவாகியது. இந்த புயலுக்கு  'டானா'  என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இவை வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று  முன்தினம் ஒடிசாவின் புரி- சாகர் தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்க ஆரம்பித்தது. மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசிய இந்த டானா புயல் நேற்று அதிகாலை கரையை கடந்தது.

இதன் காரணமாக  ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தில் மிக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், டானா புயலால் மேற்கு வங்காளத்தில் 2 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,  இந்த புயலின் காரணமாக மேற்கு வங்காளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

டானா புயலால் அதிக பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்ட மாநிலமான ஓடிசாவில், ஒரு உயிரிழப்புக் கூட நேரிடக் கூடாது என்ற வகையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cyclone dana ravaged west bengal 2 people died 2 lakh people were sheltered in camps


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->