லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பில்... வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


உச்சகட்ட சண்டை காட்சிகள், வன்முறை, போதை, கடத்தல், கொலை என கொடூரமான திரைப்படங்களை, பரபரப்புடன் எடுக்கக் கூடிய இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மாநகரம் படத்திற்கு பிறகு கைதி படம் மெகா ஹிட் ஆனது. இந்த படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக தற்போது வலம் வந்து வருகிறார். 

விஜய், ரஜினி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் வைத்து படங்களை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவரின் அந்த அறிவிப்பின்படி, பத்து நிமிடம் கொண்ட ஒரு குறும்படத்தை தனது எல்.சி.யூ கதை குறித்து இயக்கி உள்ளதாகவும், அது விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பில் இந்த படம் தற்போது உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, நடிகர் ரஜினி படத்திற்கு பிறகு தனது எல்.சி.யூ கதைகளை இயக்க உள்ளதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lokesh Kanagaraj LCU Movie announce


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->