100/100 எடுத்தால் ரூ.5,000! முதலிடம் பிடித்தால் ரூ.20,000! அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி பட்ஜெட்டில் இன்ப அதிர்ச்சி!
Puducherry Budget 2024 2025
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்: 2024-25ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, புதுச்சேரி சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
![](https://img.seithipunal.com/media/puducherry-r4pr7.jpg)
தொடர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி 2024-25ம் நிதியாண்டிற்கு ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில், உள்நாட்டு நிதி வருவாய் ரூ.6,914 கோடி, மத்திய அரசின் கொடை ரூ.3,268 கோடி, நிதி பற்றாக்குறையை போக்க ரூ.2,066 கோடி கடன் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதுச்சேரி பட்ஜெட் 2024-25 முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:
புதுச்சேரி பிராந்திய அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் 3 இடங்களை பிடிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.20,000, ரூ.15,000 மற்றும் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பாடப்பிரிவு வாரியாக 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்க ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும்.
![](https://img.seithipunal.com/media/puducherry.png)
மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6,500லிருந்து ரூ.8,000ஆக உயர்த்தி வழங்கப்படும்;
மழைக்கால நிவாரணம் ரூ.3,000லிருந்து ரூ.6,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
காரைக்காலில் பழமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும்.
இலவச அரிசி, மானிய விலையில் கோதுமை பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவை வழங்கப்படும்.
English Summary
Puducherry Budget 2024 2025