அரசுக்கு சாராயக்கடை மூலம்தான் வருமானம் வருகிறது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரிக்கு வருவாய் மதுபான கடைகள் மூலம் தான் வருகின்றது என்று, புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய மதுபான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் முதலமைச்சரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதிய மதுபான கொள்கையை புதுச்சேரியில் கொண்டுவர அரசு தயாராக இருப்பதாகவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகள், கோவில்களுக்கு அருகே அமைந்துள்ள மது கடைகளை அகற்ற வேண்டுமென்று, பாஜக எம்எல்ஏ சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்த நிலையில், இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் புதுச்சேரிகள் விற்கப்படும் சாராய பாட்டில்களில் ஹாலோகிராம் முத்திரைகளை பதிவிட வேண்டும் என்ற ஒரு உத்தரவையும் முதலமைச்சர் ரங்கசாமி பிறப்பித்துள்ளார். 

 

அண்மையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்தனர். 

இந்த விவகாரத்தை திசை திருப்பும் விதமாக புதுச்சேரி சாராயத்தால் தான் இந்த மரணங்கள் ஏற்பட்டது போன்ற அவதூறு பரப்ப, புதுச்சேரியில் தமிழக போலீசார் முயற்சி மேற்கொண்டதாக பரப்பரப்பாக பேசப்பட்டது. அப்போதே இதற்கு புதுச்சேரி காவல்துறை தக்க பதிலடி கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. 

மேலும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில், புதுச்சேரியின் சாராயத்தை குடித்த மூன்று பேருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதாகவும் ஒரு புகார் எழுந்தது. 

இதனை எல்லாம் கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு மீது அவதூறு பரப்புவதை தடுக்கும் விதமாக, தற்போது சாராய பாட்டில்களில் முத்திரையை பதிக்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளதாக தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry government liquor shop income CM rangasamy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->