6 துறைகளில் சீர்திருத்தங்கள் - மத்திய பட்ஜெட்டில் வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து இன்று 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது:- "கடந்த 10 ஆண்டுகளில் அரசின் வளர்ச்சிப் பாதை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. 

வளர்ந்த இந்தியா பூஜ்ஜிய வறுமை, தரமான கல்வி, விரிவான சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டிருக்கும் .அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதே பட்ஜெட்டின் நோக்கம். 

2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரிவிதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, சுரங்கம், நிதித்துறை, மின்சாரம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு உள்ளிட்ட ஆறு துறைகளில் சீர்திருத்தங்களை தொடங்கும்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reforms to 6 departments nirmala seetharaman info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->