''அமைதி'' வாழ்வில் ஒரு சக்தியை தருகிறது- ஆளுநர் பேச்சு!
Puducherry governor Tamilisai Soundararajan speech
ஆரோவில் யூனிட்டி மைதானத்தில் மகான் அரவிந்தரின் 150 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இரண்டாவது சர்வதேச ஆன்மீக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, பல நேரங்களில் வாழ்வில் அமைதி ஒரு சக்தியை தருகிறது. அன்னை, அரவிந்தர் அதனை கண்டறிந்து ஒரு பகுதியை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் அமைதியையும் வலிமையையும் நாம் ஏற்று வருகிறோம். கடலில் அலை எப்பொழுதும் அடித்துக் கொண்டே இருக்கும். அதனை நிறுத்த முடியாது.
அதுபோல வாழ்க்கையில் எப்பொழுதும் சிக்கல்கள் இருக்கும். அதனை பாறைகளை போல உறுதியாக எதிர்கொள்ள வேண்டும். தற்போதையெல்லாம் தற்கொலைகள் அதிகமாக நடைபெறுகிறது.
அவர்களால் சிக்கல்களை எதிர்கொள்ள முடியவில்லை. முன்னோர்கள் மகிழ்ச்சியாக எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
காலையில் யோகா பயிற்சி செய்வது மூலம் மிகப்பெரிய மனச சக்தி கிடைக்கிறது. அதன் மூலம் எந்த ஒரு சிக்கல்களையும் சமாளிக்க முடியும். இதை தான் ஆன்மீகம் சொல்கிறது.
மகாபாரதம், அரவிந்தர், அன்னை ஆகியோரின் கதை பேச்சுகளை கேட்டால் சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கை போன்றவற்றை பெறலாம். அதன் மூலம் நாம் உயர முடியும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Puducherry governor Tamilisai Soundararajan speech