அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.!! - அரசு விடுத்த எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


பணிக்கு தாமதமாக வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து துறை தலைவர்களுக்கும் நிர்வாக சீர்திருத்தத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் "பணிக்கு தொடர்ச்சியாக தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது நடத்தை விதிப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது 1964ஆம் ஆண்டு சிஎஸ்எஸ் விதி 3(1)ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு அரசு ஊழியர்களும் கடமையிலிருந்து தவறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள் பணிக்கு வந்தவுடன் உடனடியாக பணியை தொடங்க வேண்டும்.

அதற்கு பதிலாக ஓய்வு எடுக்கக் கூடாது. கோப்புகளை சரி பார்த்து அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். பணி செய்யாத அரசு ஊழியர்கள் மீது துறை வீதிகளான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து துறை தலைவர்களுக்கும் நிர்வாக சீர்திருத்தத்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry govt warned action taken if govt employees are late for work


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->