செல்போனில் விளையாட முடியாததால் மாணவர் மனவேதனையில் விபரீத முடிவு! கதறி துடிக்கும் தாய்!
Puducherry student suicide police inquiry
புதுச்சேரி, அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பச்சை வள்ளி. இவர் அங்குள்ள ஒரு தனியார் துணிக்கடையில் துப்புரவாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது கணவர் அருள் தாஸ். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி படகில் அடிபட்டு உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு கமலேஷ் (வயது 17), ரிஷ்வான் (வயது 12) என 2 மகன்கள் உள்ளனர்.
கமலேஷ் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டில் இருக்கும் நேரங்களில் ப்ரீ பையர் என்னும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பது வழக்கம்.
அது போல் கமலேஷ் நேற்றிரவு செல்போனில் விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை கமலேஷ் அவரது தாயிடம் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவித்து பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அவரது தாய் வேலைக்குச் சென்று விட்டு மாலை தருகிறேன் என தெரிவித்துள்ளார். விடுமுறை நாளான இன்று கமலேஷ் வீட்டில் இருந்து செல்போனில் விளையாட முடியாத வேதனையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தாய்க்கு அக்க்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பச்சை வள்ளி அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி துடித்தார்.
இது தொடர்பாக அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் மாணவன் மன வேதனை அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Puducherry student suicide police inquiry