புதுச்சேரி | அரை மணிநேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து! கதிகலங்கிய வாகன ஓட்டிகள்!
Puducherry vehicles breakdown road traffic
புதுச்சேரி: கண்டமங்கலம் அருகே உள்ள நவம்மாள் காப்பேர் பகுதியில் தற்பொழுது விழுப்புரம் -நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களுக்காக ஒரு வழி பாதை அமைக்கப்பட்டு தற்போது அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.
அந்த வழியில் இன்று காலை டேங்கர் லாரியும், மினி வேனும் அடுத்தடுத்து பழுதாகி நின்றதால் அங்கு ஒரு வழிப்பாதை என்பதால் புதுச்சேரியில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்து செல்ல முடியாமல் சாலையிலேயே வரிசையாக நின்றது.
இதனால் கல்லூரி செல்லும் பேருந்துகள், பள்ளி வாகனங்கள், பணிக்கு செல்பவரின் இரு சக்கர வாகனங்கள் என சாலையிலேயே சுமார் அரை மணி நேரம் நின்றதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீசார் பழுதான வாகனங்களை அப்புறப்படுத்தி மற்ற வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்ததால் சுமார் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
English Summary
Puducherry vehicles breakdown road traffic