பெண்களை ஏற்றுக் கொள்வதற்கு நாடு மனதளவில் தயாராகவில்லை - சரத் பவார் பேச்சு.! - Seithipunal
Seithipunal


நாட்டின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளவர் சரத் பவார். பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் திரட்டும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அப்படி ஒரே அணியில் எதிர்க்கட்சிகள் இணைந்தால், சரத் பவார் அல்லது நிதிஷ்குமார் போன்ற மூத்த தலைவர்கள் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், புனே டாக்டர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அவரது மகள் சுப்ரியா சூலே எம்பி உடன் சரத் பவார் கலந்து கொண்டார். அங்கு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகக் கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சரத் பவார், "இட ஒதுக்கீடு மசோதா இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இது பெண்களை ஏற்றுக்கொள்ள நாடு இன்னும் மனதளவில் தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது. 

நான் காங்கிரஸ் மக்களவை எம்.பி.யாக இருந்தது முதலே இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவாகக் குறித்துப் பேசி வருகிறேன். ஆனாலும் இன்னும் இந்த மசோதா நிறைவேறவில்லை.

நாடாளுமன்றத்தில் குறிப்பாக வட இந்தியர்களின் மனநிலை சரியாக இல்லை. நான் காங்கிரசில் மக்களவை எம்.பி.யாக இருந்தபோது, ​​நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்துப் பேசியது நினைவில் உள்ளது. 

ஒருமுறை எனது உரையை முடித்துவிட்டுத் திரும்பிப் பார்த்தேன். எனது கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான எம்.பி.க்கள் கூட அங்கு இல்லை. அவர்கள் கூட எழுந்து சென்றுவிட்டனர். அதாவது எனது கட்சியைச் சேர்ந்தவர்களுக்குக் கூட பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பதை ஜீரணிக்க முடியவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pune Doctors Association arrenge conference meeting in mumbai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->