பஞ்சாப்: அபோஹர் பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்பு.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் அபோஹர் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தின் அபோஹர் செக்டார் பகுதியில் நேற்று எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது நண்பகல் 12.15 மணியளவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியுள்ளனர்.

இதில் 2 ஏ.கே.47 துப்பாக்கிகள், 4 தோட்டா கொள்கலன்கள், மேலும் 4 தோட்டா கொள்கலன்களுடன் 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் சில தோட்டாக்கள், வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் அபோஹர் செட்டார், பெரோஸ்பூர் மாவட்டத்தின் சண்டி வாலா கிராமத்தில் எல்லை வேலிக்கு முன்னால் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, எல்லை பாதுகாப்பு படை குழுவினர் புதிதாக தோண்டப்பட்ட மண்ணைக் கவனித்து சோதனை செய்ததில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab BSF recovers arms and ammunition from Abohar region


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->