பட்டியல் இன இடஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லும்! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


பட்டியல் இனத்தில் மிகவும் பின் தங்கியவருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின் தங்கியவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்தது. 

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில், ஆறு நீதிபதிகள் பட்டியலின இட ஒதுக்கெட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளனர். ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.

வழக்கும் - பின்னணியும்:

கடந்த 2005 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சின்னையா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து ஒரு வழக்கின் தீர்ப்பின்படி, பட்டியலின எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. 

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பட்டிலின இட ஒதுக்கீட்டில், பட்டியலினத்தை சேர்ந்த மிகவும் பின்தங்கிய இனத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. 

(இதேபோல் தமிழகத்திலும் பட்டியல் இன மக்கள் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு என்று உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது) 

பஞ்சாபின் உள் ஒதுக்கீடு வழங்கய சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பட்டியலின இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த தீர்ப்பின் மூலம் கடந்த 2005 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் வழங்கிய பட்டிலின இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்ற தீர்ப்பு ரத்தாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab SC Reservation issue SC Judgement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->