அடுத்தடுத்து அதிர்ச்சி - நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வர் ரங்கசாமி முடிவு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 1950ம் ஆண்டு அரசின் ஆண்டு திட்டங்கள், 5 ஆண்டு திட்டங்களை தீர்மானிக்க மத்திய திட்டக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின் இந்த மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 2015ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 

இந்த நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் 9-வது நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச ஆளுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். ஆனால், நாளை நடைபெற உள்ள இந்தக்கூட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தின் முதலமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மோதல்போக்கு நீடித்து வரும் நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthuchery cm rangasami avoide niti ayog meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->