பாஜக ஆட்சி அமைக்க உதவும் மம்தா பானர்ஜி.. ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


மேகாலயா சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்படுகிறது. பல்வேறுஅரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக மேகாலய மாநிலம் சில்லாங்கில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் "உங்களுக்கு திரிணமூல் கட்சியின் வரலாறு தெரியும். மேற்கு வங்கம் வன்முறை நிறைந்ததாக தற்பொழுது மாறியுள்ளது. திரிணமுல காங்கிரஸ் கட்சி கோவா சட்டப்பேரவையில் போட்டியிட்டு பாஜகவிற்கு உதவுவதற்காக பெரும்தொகையை அக்கட்சி செலவு செய்தது. திரிணமூல் கட்சியின் எண்ணமே மேகாலயத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான்” என குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர் "பாஜக நாட்டின் கலாச்சாரத்தை சிதைத்து வருகின்றன. ஆனால் நாங்கள் நம்முடைய வரலாற்றையும், அடையாளத்தையும், பண்பாடு கலாச்சாரத்தையும் அழிந்துபோக விட மாட்டோம். நமது நாடு வன்முறையான நாடு கிடையாது. 

தாங்கள் நினைப்பதை அடுத்தவர் மீது திணிப்பதை ஆளும் பாஜக அரசு செய்து வருகிறது. அதற்கு எதிராக அன்பு, மரியாதை, வன்முறையற்ற சூழலுடன்  காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு அமைப்பையும் பாஜக அரசு அபகரித்து வருகிறது. நாடாளுமன்றம், ஊடகம், அரசு நிர்வாகம், தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் என அனைத்தின் மீதும் ஆர்எஸ்எஸ் தாக்குதல் நடத்தி வருகிறது" என விழா மேடையில் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi accused Mamata Banerjee will help BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->