''நான் குற்றவாளி இல்லை! என்னால் மன்னிப்பு கேட்க முடியாது'' - ராகுல் திட்டவட்டம்!
Rahul Gandhi modi surname defamation case
பிரதமர் மோடி குறித்து பேசிய அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தரப்பு மன்னிப்பு கேட்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் 2019 ஆன் ஆண்டு மக்களவைத் தேர்தலை ஒட்டி பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக தெரிவித்து குஜராத் பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை சூரத் நீதிமன்றம் விசாரித்ததில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை என கடந்த மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனால் ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் ராகுல் காந்தி சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் நீதிமன்றம் முன்பாக வழங்கிய தீர்ப்பு சரியானது என்று தீர்ப்பளித்தது.
இதனை அடுத்து ராகுலின் தண்டனையை குஜராத் நீதிமன்றமும் தள்ளுபடி செய்ய மறுத்த நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்து விசாரணையில் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று ராகுல் காந்தி தரப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதில், 'குற்றவியல் நடைமுறை மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் செய்யாத குற்றத்திற்கு ஒருவரை மன்னிப்பு கேட்க நிர்பந்திப்பது நீதி துறையின் மோசமான செயல்முறையாகும்.
இந்த அவதூறு வழக்கில் நான் குற்றவாளி இல்லை. எனது பேச்சில் தவறு இல்லை. எனவே நான் மன்னிப்பு கோர முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் முன்னதாகவே செய்திருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Rahul Gandhi modi surname defamation case