ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் ராஜினாமா! செய்யவுள்ளதாக கேரளா காங்கிரஸ் தகவல்!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்யவுள்ளதாக கேரளா காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது.

அதனை தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி 18 வது மகளிர் தேர்தலில் பதிவான வாக்குகள் என்னப்பட்டு முடிவுகள் வெளியானது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றியது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வடநாடு ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டார். ராகுல் காந்தி போட்டியிட்ட இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இந்த நிலையில் கேரளா காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதாகரன் கூறுகையில், ராகுல் காந்தி இந்தியாவை வழிநடத்து செல்ல வேண்டிய தலைவர். அவரை மக்கள் ஆதரித்து தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அதனால்தான் இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த கூட்டணியை முன்னெடுத்து சென்று நாட்டை ஆள வேண்டிய தகுதி படைத்த தலைவரான ராகுல் காந்தி வயநாட்டில் ஓங்கி நிற்பது என்பது இயலாத விஷயம் என்பதை நாம் உணர வேண்டும்.

எனவே வயநாடு தொகுதியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வார். ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற அவர் வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சி வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவார் அதற்காக ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக் கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi resigns from Wayanad constituency Kerala Congress information


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->