தப்ப முடியாது... 15 நாளில் 10 பிரச்னைகள்: பிரதமரை சாடிய ராகுல் காந்தி.! - Seithipunal
Seithipunal



தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமர்ந்த முதல் 15 நாட்களிலேயே 10 பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த பிரச்சினைகளுக்கு பதில் அளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி தப்பிக்க விடமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

ஜனநாயக கூட்டணியின் முதல் 15 நாட்களில் பயங்கர ரயில் விபத்து, காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல், ரயில்களில் பயணிகள் சந்திக்கும் அவல நிலை, நீட் தேர்வு முறைகேடு, நீட் முதுநிலை தேர்வு ரத்து, யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு, பால், பருப்பு வகைகள், எரிவாயு, சுங்க கட்டண உயர்வு, காடுகளில் தீ, தண்ணீர் பற்றாக்குறை, வெப்ப அலை உயிரிழப்புகள் போன்ற பிரச்சனைகள் நாடு முழுவதும் அரங்கேறி உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதில் மட்டுமே மும்முரனாக இருக்கிறார். அரசியல் சாசனத்தின் மீது நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கம் நடத்தும் தாக்குதலை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. 

இதை நாங்கள் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் பலமான எதிர்கட்சியாக அழுத்தம் கொடுப்பதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். மக்களின் குரலாக இருப்போம். பிரச்சனைகளுக்கு பொறுப்பேற்காமல் பிரதமரை தப்பிக்க விடமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi says 15 days 10 problems 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->