ரெயில் விபத்து: மோடி அரசே பொறுப்பு... - ராகுல் காந்தி பதிவு.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம், டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று கொண்டிருந்த விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி திடீரென விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி பெட்டி தூக்கி வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையே ரயில் விபத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 60 பேர் படுகாயகம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ரயில் விபத்தின் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்த ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வலைதள பதிவில், 

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என நம்புகிறேன். 

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக முழு இழப்பீடு வழங்கிட வேண்டும். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள ரயில் விபத்துக்கள் மோடி அரசின் தவறான நிர்வாகத்தின் அலட்சிய போக்கின் விளைவாகும். இதனால் தினசரி பயணிகளின் உயிர் மற்றும் உடமை இழப்பு ஏற்படுகிறது. இந்த விபத்துக்கு மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi says Modi govt responsibility train accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->