அமலாக்கத்துறை கேள்விகளில் இருந்து தப்பிக்க மோடி இப்படி சொல்கிறார் - ராகுல் காந்தி தாக்கு.! - Seithipunal
Seithipunal



நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் படி இதுவரை 6 கட்ட வாக்கு பதிவு நடைபெற்றுள்ள நிலையில் இறுதி கட்டமாக வருகின்ற 1 ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

உத்தர பிரதேசம், பஞ்சாப், மேற்குவங்கம், பீகார், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், சண்டிகர் என மொத்தம் 507 தொகுதிகளில் ஏழாம் கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ளது. 

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பீகார், பாட்னா பகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி, தான் மனிதனே கிடையாது கடவுளின் தூதர் கடவுளின் ஒற்றுமையாகத்துடன் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதானிக்கும் தனக்கும் இடையேயான ஒப்பந்தம் குறித்து அமலாக்கத்துறை கேட்கும் கேள்விகளில் இருந்து தப்பிக்கவே மோடி இவ்வாறு தெரிவிக்கிறார். 

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மத்திய அரசில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்படும். நாடு முழுவதும் வறுமையில் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களின் வங்கி கணக்கிற்கு ஆண்டுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi says Modi not become PM


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->