நிதிஷ்குமார் தேவையே இல்ல... ராகுல் காந்தி விமர்சனம்! - Seithipunal
Seithipunal


பீகார் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் ஒன்றிணைந்து மகாகத்பந்தன் என்ற கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணியில் நிதிஷ்குமார் முதல் முதலந்திரியாகவும் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சர் மந்திரியாகவும் செயல்பட்டு வந்தனர். 

இதற்கிடையே நிதிஷ்குமார் பாராளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார். இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா கட்சிகளுடன் முரண்பாடு ஏற்பட்டதால் நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து விலகினார். 

இதனை அடுத்து நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளத்திற்கு பாஜக ஆதரவளித்ததால் நிதிஷ்குமார் பீகாரின் முதல் மந்திரி ஆக 9வது முறை மீண்டும் பதவியேற்றார். 

இந்நிலையில் நிதிஷ்குமார் இல்லாமல் மகாகத்பந்தன் கூட்டணி சமூக நீதிக்காக போராடும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இந்தியா ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் காந்தி பீகார் புர்னியா பகுதியில் நடத்தி வருகிறார். அப்போது அவர் பேசியிருப்பதாவது, பீகார் மாநிலத்தின் சமூக நீதிக்காக மகாகத்பந்தன் கூட்டணி போராடும். 

எங்களுக்கு நிதிஷ்குமார் தேவையில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித் மக்களுக்கு நாட்டின் அனைத்து துறைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. 

தலித், ஓபிசி மற்றும் பிற பிரிவினர்களின் மக்கள் தொகையை கண்டறிவதற்கு நாட்டின் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi says no need NitishKumar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->