மிகப்பெரிய மோசடி... சற்றுமுன் பதற்றத்துடன் ராகுல்காந்தி பேட்டி!
RahulGandhi BJP ExitPolls Stock Markets
போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிட வைத்து, பங்குச்சந்தைகளை ஏற்ற, இறக்கம் செய்து, பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் ஊழலில் ஈடுபட்டு உள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று மாலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி தெரிவிக்கையில், "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக திட்டமிட்டு முறைகேடுகள் செய்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
மேலும், வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்களுக்கு முன்பே கருத்துக்கணிப்பு மூலம் பாஜக வெற்றியைப் பூதாகரமாகக் காட்டியது ஏன்?
ரூ.1000 கோடிக்கு பங்குகளை வாங்கி குவிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்களுடன் ராகுல் புகார்!
பிரதமரும், உள்துறை அமைச்சரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு யோசனை கூறியது ஏன்?
பங்குச்சந்தையில் நடத்துள்ள முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் முறைகேடு நடந்துள்ளது
மே 30, 31 தேதிகளில் பல ஆயிரம் கோடிக்கு பங்குகள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளது. பிரதமரும், உள்துறை அமைச்சரும் குறிப்பிட்ட நேரத்தில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தியது ஏன்?
ஊடகங்கள் போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றன, ஆனால் பாஜகவுக்கு 200-220 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அவர்களுக்குத் தெரியும்.
ஜூன் 3 அன்று பங்குச்சந்தை வரலாறு காணாத ஏற்றத்தைச் சந்தித்தது, ஆனால் அடுத்த நாளே நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது.
தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ₹38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் லஞ்சமாக ஏமாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
RahulGandhi BJP ExitPolls Stock Markets